உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைமறைவு குற்றவாளி தேடப்படும் நபராக அறிவிப்பு 

தலைமறைவு குற்றவாளி தேடப்படும் நபராக அறிவிப்பு 

கோவை:கொள்ளை முயற்சி வழக்கில், 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் நபரை , தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்துள்ளது. விருது நகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பேரன்நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார்,35. இவர், 2012, ஜூலை 31ல், கோவை, விளாங்குறிச்சியில் தனியாக வீட்டிலிருந்த பெண்ணிடம், கத்தியை காட்டி மிரட்டி, கொள்ளையடிக்க முயற்சி செய்தார். இந்த வழக்கில் கைதான முத்துக்குமார் ஜாமினில் வெளியே வந்த பிறகு, 12 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால், அவரை தேடப்படும் குற்றவாளியாக கோவை சி.ஜே.எம்., கோர்ட் அறிவித்தது. பீளமேடு போலீசார் சிவகாசி சென்று, முத்துக்குமார் வீட்டில் நோட்டீஸ் ஓட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ