உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்கரூவின் விளம்பர துாதராக நடிகர் வருண் தவான் நியமனம்

வாக்கரூவின் விளம்பர துாதராக நடிகர் வருண் தவான் நியமனம்

கோவை;வாக்கரூ பிராண்டின் தேசிய விளம்பர துாதராக, இந்தி நடிகர் வருண் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.வாக்கரூ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவ்ஷாத் கூறுகையில், ''நாங்கள் புதிதாக அறிமுகம் செய்துள்ள வாக்கரூ பிளஸ் மற்றும் சூப்பர் க்ளாக்ஸ் உள்ளிட்ட புதுமையான காலணிகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், 'வாக்.வாக்.வாக்.வாக் வித் வாக்கரூ' என்ற விளம்பரத்தை, வெளியிட உள்ளோம். இதன் வாயிலாக, காலணிகளை மக்களிடம் பிரபலப்படுத்த, இந்தி நடிகர் வருண் தவானை, எங்கள் நிறுவனத்தின் விளம்பர துாதராக நியமித்துள்ளோம்,'' என்றார்.நடிகர் வருண் தவான் கூறுகையில், ''வாக்கரூ அனைத்து வயதினருக்கும் ஏற்ற பிராண்டாக உள்ளது. இந்த பிராண்டின் புதிய காலணிகளை, மக்களிடம் பிரபலப்படுத்துவதற்கு நானும் இணைந்துள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ