உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை அள்ளுவதில் நிர்வாக சிக்கல்; ஹவுஸிங் யூனிட் மக்கள் அவதி

குப்பை அள்ளுவதில் நிர்வாக சிக்கல்; ஹவுஸிங் யூனிட் மக்கள் அவதி

பெ.நா.பாளையம், ; பெரியநாயக்கன்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்காததால், குப்பைகளை அள்ள, சாக்கடைகளை சுத்தம் செய்ய, சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் அருகே அத்திப்பாளையம் ரோட்டில், தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில், 1,800 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதில், 70 சதவீத வீடுகளில் பயனாளிகள் குடிபுகுந்து விட்டனர். அரசு சார்பில் மருந்து கடை, மளிகை, பால்வாடி, துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆழ்குழாய் கிணறு தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதி, பேரூராட்சி நிர்வாகத்திடம் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில், ஹவுசிங் யூனிட் மக்களின் வேண்டுகோளுக்காக பெரியநாயக்கன்பாளையம் ஹவுஸிங் யூனிட் நீர்த்தேக்க தொட்டி அருகில், 24 மணி நேரமும் பில்லுார் குடிநீர் பிடிக்கும் வகையில், குடிநீர் குழாய்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.ஹவுசிங் யூனிட் பகுதி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் முழுமையாக ஒப்படைத்தபின், அப்பகுதியில் குப்பைகளை அகற்றவும், சாக்கடைகளை சுத்தம் செய்யவும் பணிகள் மேற்கொள்ளப்படும் என, பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை