உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புடலையில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை

புடலையில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு வட்டாரத்தில், புடலையில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில், 15 ஹெக்டேரில் புடலை சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது. புடலையில், பழ ஈக்களின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படும் நிலை உள்ளது.இதை கட்டுப்படுத்த, பழ ஈக்கள் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும். மேலும், கோடை உழவு செய்து மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும்.சையான்ட்ரானில்புரோல் 1.8 மில்லியை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம், என, தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ