புதிய சட்டத்தை வாபஸ் பெற வக்கீல்கள் மனித சங்கிலி
பொள்ளாச்சி: மத்திய அரசின் மூன்று புதிய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கத்தினர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டத்திற்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, மற்றும் பாரதிய சாக் ஷியா ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த சட்டங்கள் கடந்த ஜூலை மாதம் முதல், நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவினர் (ஜேக்), தொடர் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி மற்றும் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கோர்ட் நுழைவுவாயில் முன் நடந்த போராட்டத்துக்கு, சங்கத் தலைவர் துரை, தலைமை வகித்தார்.புதிய மூன்று சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. சங்க பொருளாளர் சேவியர், இணைச் செயலாளர் செந்தில்குமார், மூத்த வக்கீல்கள் குமார், அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.