வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்படி விவசாயம் இருந்தும் அவர்கள் சம்பந்தப்பட்டாத விசயங்களில் தேவை இல்லாமல் போராட்டம் நடத்தும் திருப்பூர் தெற்கு மாவட்ட விவசாயிகள்
பொள்ளாச்சி:கொப்பரை விலை கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு பின், கிலோ, 107 ரூபாயாக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும், உற்பத்தி இல்லாததால், விவசாயிகள் பலனடைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற சாகுபடிகளை விட தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தேங்காய், கொப்பரை போன்றவை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். விலை இல்லாதது, வறட்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் தென்னை விவசாயிகள் மீளாத்துயரில் உள்ளனர்.மூன்று ஆண்டுகளுக்கு பின், கொப்பரை கிலோ, 100 ரூபாயை கடந்துள்ளது. ஆனாலும், கொப்பரை உற்பத்தி இல்லாததால், விவசாயிகள் பயன் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கிலோ ரூ.107!
தென்னை விவசாயி தங்கவேலு கூறியதாவது:தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் சீசன் முடிந்து விட்டதால், தேங்காய் வரத்து குறைந்துள்ளது. இச்சூழலில், கர்நாடகாவில் கடந்த, 2023ல் கொள்முதல் செய்த பால் (பந்து) கொப்பரையும், தமிழகத்தில் அரவை கொப்பரையும் விற்பனை முடியும் தருவாயில் உள்ளது.தினமும், 1,000 - 2,000 டன் வரை, ஒரு நாளுக்கு கொப்பரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, கொப்பரை உற்பத்தியும் குறைந்துள்ள நிலையில், தேவை அதிகரித்துள்ளது.வடமாநிலங்களில் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. அரேபிய நாடுகளுக்கு, கொப்பரை, தேங்காய் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், கடந்த, மூன்று ஆண்டுகளாக, கிலோ 80 ரூபாய் அளவிலேயே இருந்த கொப்பரை விலை, தற்போது, 100 ரூபாயை எட்டியுள்ளது.காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி நேற்று, ஒரு டின் (15 கிலோ எடை) தேங்காய் எண்ணெய், 2,280 ரூபாய்; ஒரு கிலோ தேங்காய் பவுடர், 170 ரூபாய்; ஒரு கிலோ முதல் தர கொப்பரை, 107 ரூபாயுக்கும், இரண்டாம் தர கொப்பரை, 105 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு டன் முதல் தர தேங்காய் (கறுப்பு) 35 ஆயிரம் ரூபாய்க்கும், இரண்டாம் தர (பச்சை) தேங்காய், 33 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது, சீசன் இல்லாத நேரத்தில், தேவை அதிகரிப்பால் விலை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. தேங்காய், கொப்பரை இருப்பு வைத்துள்ள வியாபாரிகளுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். காத்திருக்கணும்!
கேரளா வாடல் நோய், கடும் வறட்சி போன்ற காரணங்களில் தென்னை மரத்தில் குரும்பல் உதிர்ந்தன. தற்போது, பருவமழை கை கொடுத்தாலும், இன்னும் தேங்காய் அறுவடை துவங்கி, 2025ம் ஆண்டு ஏப்., மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. சீசன் துவங்கும் வரை, தேங்காய், கொப்பரை, இளநீர் பற்றாக்குறையாகத்தான் இருக்கும்.இதனால், தேங்காய், கொப்பரை, ஆயில் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. கொப்பரை விலை கிலோவுக்கு, 140 ரூபாயை எட்டக்கூடிய வாய்ப்புள்ளது.எனவே, அரசு கொள்முதல் செய்த கொப்பரையை விற்பனை செய்யாமல் தட்டுப்பாடு அதிகமாக உள்ள, 2025ம் ஆண்டு, ஜன., பிப்., மாதங்களில் விற்பனை செய்தால் பயனாக இருக்கும். மேலும், மத்திய அரசு சார்பில், கொப்பரை கொள்முதல் செய்ய, கிலோவுக்கு, 140 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இப்படி விவசாயம் இருந்தும் அவர்கள் சம்பந்தப்பட்டாத விசயங்களில் தேவை இல்லாமல் போராட்டம் நடத்தும் திருப்பூர் தெற்கு மாவட்ட விவசாயிகள்