உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் இன கவர்ச்சி பொறிகள்

பயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் இன கவர்ச்சி பொறிகள்

சூலுார்:பூச்சிகளை அழிக்கும் பணியில் இனக்கவர்ச்சி பொறிகள் முக்கிய பங்காற்றுகின்றன, என, வேளாண் அதிகாரிகள் கூறினர்.பயிர் பாதுகாப்பு குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:பூச்சிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பை ஏற்படுத்தி கொள்ளவும், எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ளவும், இனப்பெருக்கத்துக்காக ஒரு விதமான வாசனை திரவத்தை சுரந்து காற்றில் பரப்புகின்றன. இது இனக்கவர்ச்சி திரவம் எனப்படுகிறது. இந்த திரவத்தின் தன்மை மற்றும் பண்புகள் கண்டறியப்பட்டு, அதை செயற்கை முறையில் கண்டுபிடித்து பூச்சிகளை கவர்ந்து அழித்திட பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், ஆண், பெண் பூச்சிகள் அழிக்கப்படும். இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பயிரில் பூச்சிகளின் தாக்குதல் இருக்கிறதா இல்லையா என கண்டறிந்திடலாம். பூச்சிகளை குழப்பமடைய செய்து இனச்சேர்க்கை நடைபெறாமல் தடுக்கலாம். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !