உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாய செய்தி தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை பெய்யும்

விவசாய செய்தி தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை பெய்யும்

பொள்ளாச்சி;கோவையில் தென்மேற்கு பருவமழை இதுவரை, 47 மி.மீ., பெய்துள்ளதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சத்திய மூர்த்தி தெரிவித்தார். தென் மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்., வரை பெய்வது வழக்கம். நடப்பாண்டில், ஜூன் முதல் வாரம் பருவமழை துவங்கியதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில், ஜூன் மாதம் 27 மி.மீ., ஜூலை மாதம் தற்போது வரை சராசரியாக 20 மி.மீ., மழை பெய்துள்ளது.இந்த வாரம் மேலும் சில நாட்கள் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக, காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சத்தியமூர்த்தி கூறுகையில், ''கோவையில், ஜூன் மாதம், 37 மி.மீ., ஜூலை மாதம், 44 மி.மீ., மழை பொழிவு இருக்கும். ஜூன் மாதம், பெரிய அளவில் இல்லை எனினும், 27 மி.மீ., மழை பெய்துள்ளது.ஜூலை மாதம் இதுவரை சராசரியாக 20 மி.மீ., பெய்துள்ளது. வரும் நாட்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. செப்., வரை தென்மேற்கு பருவமழை தொடரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை