உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓணம் சிறப்பு விற்பனைகோ-ஆப்டெக்ஸில் ஆஹா

ஓணம் சிறப்பு விற்பனைகோ-ஆப்டெக்ஸில் ஆஹா

பல தலைமுறைகள் கடந்தாலும், இன்றளவும் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது கோ-ஆப்டெக்ஸ். குடும்பம், குடும்பமாக சென்று, கோ-ஆப் டெக்ஸில் புடவைகளை வாங்கிச் செல்வோர் எண்ணிக்கை, அதிகரித்திருக்கிறது. மக்களுக்கு ஏற்ப புதுவிதமான டிசைன்களையும், புதுவிதமான தயாரிப்புகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது, இந்நிறுவனம். தற்போது 'பழசுக்கு புதுசு' பட்டு மேளா நடந்து வருகிறது. பழைய வெள்ளி ஜரிகை பட்டு கொடுத்து, அதற்கு என்ன மதிப்பிருக்கிறதோ, அதே மதிப்பில் புதிய ஆடைகள் வாங்கிக் கொள்ளலாம். கூடுதல் சிறப்பம்சமாக, ஆசிரியர் தினம் சிறப்பு விற்பனை மற்றும் ஓணம் விற்பனை, செப்., 14 வரை நடக்கிறது. இத்தருணத்தில் விரும்பும் ஆடைகளை, 30 சதவீத தள்ளுபடியில் எடுத்துக் கொள்ளும் அருமையான வாய்ப்பு இருக்கிறது. ஆன்-லைனிலும் வாங்கிக் கொள்ளும் வசதி இருக்கிறது. கோவையில், வ.உ.சி., பூங்கா அருகே, ரயில்வே ஸ்டேஷன், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனியில் உள்ள ஷோரூமுக்கு சென்று, மனங்கவர்ந்த ஆடைகளை வாங்கி வரலாம். பட்டு பாரம்பரியம்... கோ-ஆப்டெக்ஸில் வாங்கினால் ஆனந்தம்.தொடர்புக்கு: 99448 45919


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ