உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ்களில் பொருத்திய ஏர் ஹாரன் பறிமுதல்

பஸ்களில் பொருத்திய ஏர் ஹாரன் பறிமுதல்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே இந்த பஸ்களில் சில பஸ்கள் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையிலான போலீசார் நேற்று திடீரென பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, 4 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர். மேலும், பஸ்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ