உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.ஜே.கே., கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி 

ஏ.ஜே.கே., கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி 

கோவை:கோவை ஏ.ஜே.கே., கல்லுாரியில், இன்போசிஸ் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு 15 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பாடபுத்தகங்களை தாண்டி, மாணவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றங்களின் அடிப்படையில் திறன் மேம்பாடு என்பது அவசியமாகியுள்ளது. அதன் அடிப்படையில், இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில புலமை, குழுவிவாதம், தொழில்நுட்ப திறன், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் அவசியம், மாதிரி நேர்காணல், ரெசியூம் தயார் செய்தல், உள்ளிட்டவை குறித்து, இன்போசிஸ் நிறுவன வல்லுநர்கள் பயிற்சி அளித்தனர். பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு, இன்போசிஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறைவு விழாவில், கல்லுாரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை