மேலும் செய்திகள்
அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
21-Feb-2025
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் காட்டூரில் உள்ள நகரவை ஆரம்பப் பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு காரமடை வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை மேரி ஆனந்த குமாரி வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள் வடிவு ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். விழாவில் கவுன்சிலர் சுனில் குமார் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.
21-Feb-2025