உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடமாநிலத்தவர் வருகை; வேகமெடுக்கும் பணிகள் 

வடமாநிலத்தவர் வருகை; வேகமெடுக்கும் பணிகள் 

கோவை : வடமாநில தொழிலாளர்களின் வருகையால், கட்டுமானத் துறை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் கட்டுமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு மேற்கொள்ளப்படும் கட்டடப் பணிகளில் பெரும்பாலும், உ.பி., பீகார், அசாம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஏப்., துவங்கிய லோக்சபா தேர்தல் சமயத்தில், கோவை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த, வடமாநில இளைஞர்கள் ஓட்டுப்பதிவுக்காக, தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால், உள்ளூர் இளைஞர்களை வைத்து, கட்டடம் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.தற்போது, மத்தியில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலானோர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வந்து விட்டனர். இதனால், கட்டடம் உட்பட பல பணிகள் வேகமெடுத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ