உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உளவுத்துறை உதவி கமிஷனர் இடமாற்றம்

உளவுத்துறை உதவி கமிஷனர் இடமாற்றம்

கோவை : கோவை மாநகர போலீசில் பணியாற்றி வந்த இரண்டு உதவி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கோவை உளவுத்துறை உதவி கமிஷனராக பணியாற்றி வந்த ஆனந்த் ஆரோக்கியராஜ் திருச்சி, ஸ்ரீரங்கம் உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யபட்டு, அந்த பொறுப்புக்கு போத்தனுார் உதவி கமினராக பணியாற்றி வந்த மணிவர்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதேபோல், சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மகேஸ்வரன் ராமநாதபுரம் மாவட்டம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திருநெல்வேலி டவுன் உதவி கமிஷனராக பணியாற்றி வந்த செந்தில்குமார் கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை