உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிரப்பள்ளி ரோடு சீரமைப்பு போக்குவரத்துக்கு அனுமதி

அதிரப்பள்ளி ரோடு சீரமைப்பு போக்குவரத்துக்கு அனுமதி

வால்பாறை;வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் இருந்து, வால்பாறை செல்லும் ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் இங்கு வருகின்றனர்.இந்நிலையில், கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் பெய்யும் கனமழையால் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.கடந்த வாரம் பெய்த கனமழையால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள மளுக்கப்பாறை ரோட்டில் மண்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த, 20ம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.இந்நிலையில், ரோடு சீரமைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து நேற்று முன் தினம் அதிரப்பள்ளி ரோட்டில் வாகன சோதனை ஓட்டம் துவங்கியது. நேற்று முதல், இரு மாநில போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது. ஒரு வாரத்திற்கு பின், வாகன போக்குவரத்து துவங்கியதால் இருமாநில மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை