உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பால் பொருட்கள் விற்பனை சங்கத்துக்கு விருது வழங்கல்

பால் பொருட்கள் விற்பனை சங்கத்துக்கு விருது வழங்கல்

பொள்ளாச்சி;கேரள அரசின் கீழ், 'மில்மா' பால் நிறுவனம் செயல்படுகிறது. இதன் சங்கங்கள் வாயிலாக, பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வகையில், 'மில்மா'வின், பொதுக்குழுக் கூட்டம் கோழிக்கோட்டில் நடந்தது.அதில், பாலக்காடு மாவட்டத்தில், அதிக பால் பொருட்கள் விற்பனை செய்ததன் பேரில் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள மூலக்கடை குன்னங்காட்டுபதி சங்கத்துக்கு விருது வழங்கப்பட்டது.'மில்மா' தலைவர் மணி விருதை வழங்க, சங்கத் தலைவர் ஆனந்த், செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'கேரள மாநிலத்தில் 'மில்மா'வின் மற்ற சங்கங்களை விட அதிகளவு இந்த சங்கத்தில் இருந்து பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதனை ஊக்குவிக்கும் வகையில், அரசால், 2023-24ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ