உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விழிப்புணர்வு மினி மாரத்தான்

விழிப்புணர்வு மினி மாரத்தான்

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், 'நமது இயற்கை , நமது எதிர்காலம்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும், மினி மாரத்தான் ஓட்ட பந்தயம் நடந்தது.ஊட்டி சாலையில் பிளாக் தண்டர் முன்பு இருந்து, இப்பந்தயம் துவங்கியது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் கவிதாசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். துணை முதல்வர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கொடியசைத்து, மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை துவக்கி வைத்தார்.வகுப்புகள் வாரியாக, மூன்று பிரிவாக மினி மாரத்தான் ஓட்ட போட்டிகள் நடந்தன. இதில், 825 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 4, 5 வகுப்பு மாணவியர் பிரிவில் அக்னி அணியை சேர்ந்த கயல், மாணவர் பிரிவில் ஆகாஷ் அணியின் முகிலன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். ஆறு, ஏழு, எட்டு வகுப்பு மாணவியர் பிரிவில் பிரிதிவி அணியின் ஐஸ்வர்யாவும், மாணவர் பிரிவில் அக்னி அணி தானேஷ் முதலிடம் பெற்றனர். ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்புகள் மாணவியர் பிரிவில் ஆகாஷ் அணியைச் சேர்ந்த நிதின், மாணவர் பிரிவில் ஆகாஷ் அணியைச் சேர்ந்த தியா அபிலாஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த ஓட்டப் போட்டியில் அதிக வெற்றி புள்ளிகளை எடுத்த, அக்னி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. விழாவில், மாணவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளியின் உடற்கல்வி துணை இயக்குனர் அனிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ