உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சீர்வரிசை தட்டுகள் வழங்கி கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

சீர்வரிசை தட்டுகள் வழங்கி கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில், 226 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தி, சீர்வரிசை தட்டுகள் வழங்கப்பட்டன.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஏழ்மை நிலையில் உள்ள, நுாறு கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு வளைகாப்பு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில், 226 கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா, பல்லடம் ரோடு தனியார் மண்டபத்தில் நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சியாமளா முன்னிலை வகித்தார். முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா வரவேற்றார்.தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு, 13 வகையான பொருட்கள் சீர்வரிசை தட்டுகள் வழங்கப்பட்டு வளைகாப்பு நடந்தது. அதில், அங்கன்வாடி ஊழியர்கள், உறவினர்கள் சீர்வரிசை தட்டுகளை எடுத்து சென்று, கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, நலுங்கு வைத்து, ஆசி வழங்கினர்.மேலும், கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய உணவுகள், தேவையான ஊட்டசத்துகள் மற்றும் கர்ப்பகால பராமரிப்பு குறித்தும் விளக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் கணேசன், நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ