உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசாணியம்மன் கோவிலில் பாலாலயம்; கும்பாபிேஷகத்துக்கு திருப்பணி துவக்கம்

மாசாணியம்மன் கோவிலில் பாலாலயம்; கும்பாபிேஷகத்துக்கு திருப்பணி துவக்கம்

பொள்ளாச்சி : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் நடத்தப்படவுள்ள நிலையில், திருப்பணிகள் துவங்குவதற்காக பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.பொள்ளாச்சி அருகே உள்ள, பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கடந்த, 2000, 2010ம் ஆண்டில், கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், சட்டசபையில், மாசாணியம்மன் கோவில், கும்பாபிேஷகம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன்படி, திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பாலாலயம் நேற்று நடந்தது.அறங்காவலர் குழுத் தலைவர் முரளிகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்.பி., ஈஸ்வரசாமி, எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ., அதிருப்தி

பாலாலயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அ.தி.மு.க.,வை சேர்ந்த வால்பாறை எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி திடீரென வெளியேறினார். அதன்பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''பாலாலயம் நிகழ்ச்சி காலை, 9:00 முதல் 11:00 மணி வரை என, தெரிவிக்கப்பட்டது. நான், 9:10 மணிக்கு வந்து விட்டேன்.எம்.பி., வருவதற்கு காலதாமதம் ஆனது. அனைவருக்கும் சந்தனப்பொட்டு வைக்கப்பட்டது. ஆனால், எனக்கு சந்தனப்பொட்டு வைக்கவில்லை. மக்கள் பிரதிநிதிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. இது குறித்து, கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி