உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோரிக்கைகளை வலியுறுத்தி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், யூனியன் வங்கி மண்டல அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தொழிலாளர் நல வாரியம் முன்பாக, யூனியன் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்; வாடிக்கையாளர்களுக்கு தேவையான வங்கி சேவைகளை உரிய முறையில் வழங்க வேண்டும் என்பன உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் சையது இப்ராஹிம் தலைமை வகித்தார். வங்கி அதிகாரிகள் சங்க உதவி தலைவர் கார்த்திக், ஊழியர் சங்க செயலாளர் முரளி முன்னிலை வகித்தனர். இதில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை