மேலும் செய்திகள்
எச்சில் இல்லாத நகரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
18-Feb-2025
கோவை: சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சுங்கம் பகுதியில் விழிப்புணர்வு வாகனத்தில், படம் திரையிடப்பட்டது. அதில், கல்லுாரி மாணவ - மாணவியர், 'கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' உள்ளிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறினர். எல்.இ.டி., திரை பொருத்தப்பட்ட விழிப்புணர்வு வாகனத்தில், சாலை பாதுகாப்பு குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.
18-Feb-2025