உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதிதான் பெண்களின் வழிகாட்டி 

பாரதிதான் பெண்களின் வழிகாட்டி 

கோவை; வெள்ளலுார் முத்தமிழ்ச் சங்கம் சார்பில், கவிஞர் சண்முகதேவி எழுதிய, 'பாரதி வரியும் பாவையர் வாழ்வும்' என்ற, நுால் வெளியீட்டு விழா நடந்தது.அன்னம் அறக்கட்டளை நிறுவனர் தீஸ்மா நுாலை வெளியிட, சமூக ஆர்வலர் கலைவாணி பெற்றுக் கொண்டார். நுால் குறித்து தீஸ்மா பேசுகையில், ''பெண்களின் வாழ்க்கையை பற்றிச் சிந்திக்கும் போது, பாரதியைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. அப்படி பாரதியின் வரிகளை எடுத்து, பெண்களின் வாழ்வோடு தொடர்புபடுத்தி எழுதி இருப்பது, இந்த நுாலின் தனிச்சிறப்பு. பாரதிதான் பெண்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி,'' என்றார்.வெள்ளலுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலன், பேராசிரியர் அன்புசிவா உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். நுாலாசிரியர் சண்முகதேவி ஏற்புரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை