உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏரிப்பட்டி பள்ளியில் பிறந்தநாள் பரிசு திட்டம்

ஏரிப்பட்டி பள்ளியில் பிறந்தநாள் பரிசு திட்டம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பிறந்த நாள் பரிசு திட்டம் கொண்டாடப்பட்டது.அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கும் போட்டிகளை நடத்தி வருகிறது. அவ்வகையில், ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பிறந்த நாள் பரிசு திட்ட விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி தலைமை வகித்தார். துபாய் வாழ் தமிழர் ரவி சொக்கலிங்கம், மாணவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.மேலும், 'என்னால் முடியும்' என்ற மந்திர வார்த்தையை மாணவர்களின் மனதில் ஆழ பதிய வைத்து, எவ்வாறு இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என விளக்கினார்.தொடர்ந்து, மாணவர்களிடம் கேள்விகளை கேட்டு பரிசுகளை வழங்கினார். மே, ஜூன், ஜூலை மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடிய ஒவ்வொரு மாணவருக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுதிய நுால் பரிசாக வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் கீதா நன்றி கூறினார். ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை