மேலும் செய்திகள்
திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
16 minutes ago
இளநீர் விலையில் மாற்றமில்லை
17 minutes ago
சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி
17 minutes ago
யூனியன் வங்கி ஊழியர்கள் சங்க வெள்ளி விழா மாநாடு
17 minutes ago
பாலக்காடு;பணியாற்றிய கல்லுாரியில் கல்லறை அமைத்து பிரியாவிடை கொடுத்த, கம்யூனிஸ்ட் கட்சிக்கு பதிலளிக்கும் வகையில், பா.ஜ., சார்பில் போட்டியிடுவதாக, ஆலத்துார் தொகுதி வேட்பாளர் சரசு தெரிவித்தார்.கேரள மாநிலம், ஆலத்துார் தொகுதி பா.ஜ., வேட்பாளர் சரசு நிருபர்களிடம் கூறியதாவது: 'சிட்டிங்' எம்.பி மற்றும் காங்கிரஸ் வேட்பாளருமான ரம்யா, தேவஸ்தானம் துறை அமைச்சரும் மா.கம்யூ., வேட்பாளருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் ஆலத்துார் தொகுதியில் போட்டியிடுகிறேன்.பல்வேறு கல்லுாரிகளில் பேராசிரியராக பணிபுரிந்து, கல்லுாரி முதல்வர் பணியில் நுழைவதற்கு முன் வரை இடது சாரி ஆசிரியர்கள் அமைப்பின் உறுப்பினராக இருந்தேன்.பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரியின் முதல்வராக இருந்த போது, கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் அணியான எஸ்.எப்.ஐ., மற்றும் இடது சாரி ஆசிரியர்கள் அமைப்பு உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியது. கல்லுாரி முதல்வராக இருந்து, 2016 மார்ச் மாதம் ஓய்வு பெறும் வேளையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணி, கல்லுாரி வாசலில் கல்லறை அமைத்து எனக்கு பிரியாவிடை அளித்தது. மன வருத்தம் அளித்த இச்சம்பவம் பெரும் சர்ச்சையானது.மத்திய அமைச்சர் பிரதாப் ரூடி, பா.ஜ. மாவட்ட தலைவர் கிருஷ்ணதாஸ் உடன் வந்து என்னை சந்தித்து ஆறுதல் கூறினார். எனது புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், போதுமான ஆதாரங்கள் இல்லை என, அவர்களை நீதிமன்றம் விடுவித்தது. நெருக்கடியான காலத்தில் பா.ஜ., கட்சி என்னுடன் நின்றது.தற்போது, பா.ஜ. ஆலத்துார் தொகுதி வேட்பாளராக என்னை தேர்ந்தெடுத்துள்ளது. எனக்கு கல்லறை அமைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணிக்கு பதிலளிக்கும் வகையில், இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். இவ்வாறு, கூறினார்.
16 minutes ago
17 minutes ago
17 minutes ago
17 minutes ago