உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை தாக்கியவர்களை சந்தித்த பா.ஜ., நிர்வாகி

யானை தாக்கியவர்களை சந்தித்த பா.ஜ., நிர்வாகி

தொண்டாமுத்தூர்: விராலியூரில், காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.நரசீபுரம் அடுத்த விராலியூரில், கடந்த, ஜூலை, 28ம் தேதி இரவு, ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதில், காட்டு யானை தாக்கியதில், கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். மீண்டும், அதே யானை தாக்கி, மேலும் மூவர் காயமடைந்தனர்.பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் நேற்று மாலை, காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.தொடர்ந்து, அப்பகுதி மக்களிடமும், விவசாயிகளிடமும், காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். பா.ஜ., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி