உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டுக்குள் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்

வீட்டுக்குள் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்

கோவை;வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த வாலிபர் உடலை, மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் மணிகண்டன், 31, இன்ஜி., பட்டதாரி; இவர் கடந்த, 6 ஆண்டுகளாக கோவை சிங்காநல்லுாரை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியில், வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவர் ஆன்லைன் டிரேடிங் செய்து வந்தார்.கடந்த, 2 நாட்களாக அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியது. வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின்படி, கிளம்பி வந்த மணிகண்டனின் தாயார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார். மணிகண்டன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். சிங்காநல்லுார் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். அப்போது சிக்கிய ஒரு கடிதத்தில், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. உடலை மீட்ட போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ