மேலும் செய்திகள்
திண்ணை பிரசாரம்; அ.தி.மு.க., துவக்கம்
17-Feb-2025
பொள்ளாச்சி; கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, நேற்று பொள்ளாச்சியில் திண்ணை பிரசாரம் செய்து, பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.பொள்ளாச்சி இந்திரா நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் செய்த திட்டங்கள், தி.மு.க., அரசு பதவியேற்ற நான்கு ஆண்டுகளில், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைஎடுத்துக்கூறி, துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்து, வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தார். அப்போது, வரும், 2026ல் தமிழக முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்க, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும், என, வலியுறுத்தினார்.அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
17-Feb-2025