உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகனிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்த உத்தரவு ரத்து

மகனிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்த உத்தரவு ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், மதினா வீதியைச் சேர்ந்த சவுகத் அலி மனைவி சுப்புஹானிபேகம், 58. இவர் தன் சொத்துக்களை நான்கு மகன்களுக்கும் இனாம் செட்டில்மென்ட் வாயிலாக வழங்கினார்.இதில், இரண்டாவது மகன் முகமது பைசல்கான் சொத்துக்களை பெற்ற பிறகு தன்னையும், தன் கணவரையும் பராமரிக்காமல் கைவிட்டு விட்டார். இதனால் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வருவதால் முகமது பைசல் கானுக்கு எழுதி வைத்த இனாம் செட்டில்மென்ட்டை ரத்து செய்து சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என, 2021ல் அப்போதைய கலெக்டர் சந்திரகலாவிடம் தாய் சுப்புஹாணி பேகம் மனு அளித்தார்.விசாரித்த அதிகாரிகள் அறிக்கையின்படி, செப்., 2021ல் மகன் முகமது பைசல் கான் பெயரில் இருந்த இனாம் செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்த கலெக்டர் சந்திரகலா, அதற்கான நகலை தாய் சுப்புஹாணி பேகத்திடம் வழங்கினார்.கலெக்டரின் உத்தரவை எதிர்த்து முகமது பைசல் கான் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், 'பெற்றோர் பெயரில் மேலும் சொத்துக்கள் உள்ள நிலையில் வாழ்வாதாரத்திற்கு வழியில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. மகனிடம் இருந்து பறிமுதல் செய்து தாயிடம் வழங்கிய கலெக்டர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பறிமுதல் செய்த சொத்துக்களை மீண்டும் மகனுக்கு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

NOORULLA KHAN
ஜூலை 25, 2024 10:44

Wrong judgement


Rajendran
ஜூலை 25, 2024 06:27

Wrong judgement ???


Rajendran
ஜூலை 25, 2024 06:25

இது தவறான தீர்ப்பு, மாவட்ட ஆட்சியர் சரியாக செய்துள்ளார்??அதேசமயம் நீதிபதி அவர்கள் சற்று சிந்தித்து பாருங்கள்


Rajasekar MS
ஜூலை 25, 2024 00:58

செய்தி தெளிவாக இல்லை 4 மகன்களுக்கு தங்களது சொத்தை கொடுத்து உள்ளனர், ஒரு மகனிடம் மட்டும் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது மற்ற மகன்களும் காப்பாற்ற வேண்டும் அல்லது 4 பேரிடமும் திரும்ப பெற வேண்டும். நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும்.


haja mohideen
ஜூலை 25, 2024 09:21

மற்ற மூன்று மகன்களும் அந்த தாயின் வாழ்வாதாரம் வழங்குகிறார்கள். இவர் மட்டும் அந்த பொறுப்பிலிருந்து தப்பித்து கொள்கிறார். இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மகன் தன் தாய்க்கு என்ன செய்தாலும் அந்த தாயின் கருவறையில் இருந்த ஒரு நொடிக்கு ஈடாகாது. நீதிபதி அவர்கள் தாயின் மான்பை அறியாமல் அவருக்கு எந்த நிவாரணத்தையும் வழங்காமல் ஒரு வழி தீர்ப்பை வழங்கி விட்டார்கள்.


Apposthalan samlin
ஜூலை 24, 2024 10:39

மோசமான தீர்ப்பு தலைமை நீதிபதி இந்த தீர்ப்பை மாற்ற வேண்டும்


Dharmavaan
ஜூலை 24, 2024 09:25

அநீதி தவறான தீர்ப்பு கேவலம்


Naresh Kumar
ஜூலை 24, 2024 07:07

மிக மிக தவறான முன்னுதாரணத்தை தரும் தீர்ப்பு. ஒரு நாள் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கும் இதே நிலை வரும் அப்போதுதான் தான் செய்த தவறை உணர்வார்கள்.


GMM
ஜூலை 24, 2024 06:39

இனாம் செட்டில்மண்டில் பெற்றோரை ஆயுள் முழுவதும் பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும். இருக்க வேண்டும். புகாருக்கு உட்பட்ட பெற்றோர் சொத்தை, மகனிடம் இருந்து பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு மிக சரியே. பெற்றோருக்கு சொத்து, வருவாய் மட்டும் போதாது. மகனின் உதவிகள் தேவை. அது இல்லாததால் தான் மனம் வெம்பி, நீதிமன்றம் வருகின்றனர். நீதிமன்றம் உதவ முன் வர வேண்டும். நீதிமன்ற ரத்து உத்தரவு மிக தவறு. வழக்கறிஞர்கள் வாத அடிப்படையில் குடும்ப விவகாரம் அறிவது கடினம். கலெக்டர் உத்தரவில் நீதிமன்றம் ஏன் தலையிடுகிறது?


Kannan
ஜூலை 24, 2024 20:14

கலெக்டர் அவர்களே ஒரு மாவட்ட நீதிபதியின் அதிகாரம் கொண்டவர். தீர விசாரித்த பிறகே தாய் தந்தையரை கைவிட்ட மகனுக்கு அவர்களின் சொத்தில் மட்டும் எப்படி உரிமை என்ற கோணத்தில் சரியான நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் உயர்நீதிமன்றத்தின் தலையீடு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும். ஒரு பெற்றோருக்கு மாற்று வாழ்வாதாரம் உள்ளது என்ற வகையில் பிள்ளைகளின் அரவணைப்பு தேவை இல்லையா மாண்புமிகு நீதியரசர் அவர்களே?


Rasi
ஜூலை 24, 2024 04:50

தாய், தந்தையரை ஏமாற்றும் மகன் மற்றும் மகள்களுக்கு இது தவறான தீர்ப்பு. நீதி மன்றம் செய்வது தவறு, பெற்றோர்க்கு இஷடமில்லாத சொத்து எழுதி வாங்கும் பணம் தின்னி கழுகுகளுக்கு கொண்டாட்டமான தீர்ப்பு. கடைசி ஆயுதமாக நம்பி வந்த பெரியவர்களுக்கு நீதி மறுபடியும் செத்தது தான் மிச்சம்..


rama adhavan
ஜூலை 24, 2024 06:18

தீர்ப்பு தவறு அல்ல. மூளை இல்லாமல் செய்த செட்டில்மெண்ட் தான் தவறு. தான் உயிர் உடன் இருக்கும்வரை தனது பெயரில் உள்ள சொத்துக்களை மறந்தும்கூட யாருக்கும் செட்டில்மெண்ட் பண்ணக்கூடாது. உயில் எழுதி வைத்து இருக்கலாமே? அப்போது தான் கெத்தாக இருக்கலாம்.


chennai sivakumar
ஜூலை 24, 2024 08:09

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னரே என்னுடைய பாட்டிக்கு அவரது மாமியார் கூறிய அறிவுரை "கடைசி வரைக்கும் சொத்தை யாருக்கும் கொடுக்காதே" என்பதுதான். அதே போல 50 ஆண்டுகளுக்கு மேல் என்னுடைய பாட்டியை பராமரித்து இருந்தாலும் என்னை நம்ப வில்லை என்பது no point.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை