உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டுப்பாடின்றி சுற்றும் கால்நடைகள்; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்

கட்டுப்பாடின்றி சுற்றும் கால்நடைகள்; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளால், விபத்து அபாயம் ஏற்படுகிறது.பொள்ளாச்சி நகரில், நாளுக்கு நாள் வாகனங்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது. காலை மற்றும் மாலையில், போக்குவரத்து மிகுதியான நேரத்தில், முக்கிய வழித்தடங்களில் நெரிசலும் அதிகரிக்கிறது.இந்நிலையில், ரோட்டில் குறுக்கிடும் கால்நடைகளால் வாகன விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, பல்லடம் மற்றும் உடுமலை ரோட்டில் கால்நடைகள், கட்டுப்பாடின்றி சுற்றி வருகின்றன.அவைகள், ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளில் உணவை தேடி அலைகின்றன. மேலும், ரோட்டோரத்தில் மரத்தின் நிழலில் தஞ்சமடையும் கால்நடைகள், திடீரென ரோட்டின் நடுவே கடந்து செல்ல முற்படுவதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். நகராட்சி நிர்வாகம் கால்நடை உரிமையாளர்களைக் கண்டறிந்து, எச்சரிக்கை விடுப்பதுடன் அபராதம் விதிக்க வேண்டும்.தன்னார்வலர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி நகரில், கால்நடை வளர்ப்போர், குடியிருப்பு ஒட்டிய பகுதிகளில் மேய்ச்சலுக்காக விட்டுச் செல்கின்றனர். சில நேரங்களில், அவைகள், முக்கிய ரோடுகளின் வழியே கடந்து செல்ல முற்படுகின்றன. வேகமாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தடுமாறி ரோட்டில் விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர். கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, அறிவுறுத்தினால் மட்டுமே இதுபோன்ற சூழலை தவிர்க்க முடியும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி