பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பொள்ளாச்சி;தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, சென் னை பனையூரில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதனை வரவேற்கும் விதமாக, பொள்ளாச்சி நகரில், அக்கட்சித் தொண்டர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நகரத் தலைமை சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.