மேலும் செய்திகள்
சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
12-Feb-2025
கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீஸ் எல்லைக்குட்பட்ட, இரு பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில், இரு பெண்கள் உயிரிழந்தனர். துடியலுார் பகுதியில் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க பெண் மீது, அவ்வழியாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதேபோல், பூசாரிபாளையம் பகுதியில் வீரகேரளத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி, 42 என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்தார். பலத்த காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கடனை திருப்பித் தராததால் ஆத்திரம்
கோவில்மேடு, நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன், 38; மனைவி சூர்யா, 35. பாலமுருகன், நகைக்கடையில் பணியாற்றி வருகிறார். ஆறு மாதங்களுக்கு முன் கவிதா என்பவரிடம் இருந்து, ரூ. 1.30 லட்சம் கடனாக பெற்றார். அதற்கான வட்டியை செலுத்தாமல் இருந்ததால் கவிதா, பாலமுருகனை தகாத வார்த்தைகளால் திட்டி, பத்திரத்தில் கையெழுத்து பெற்றுள்ளார். கடந்த 26ம் தேதி பாலமுருகன் மற்றும் சூர்யா ஆகியோர் வீட்டின் அருகில் இருந்தபோது, அங்கு வந்த கவிதாவின் கணவர் சதீஷ், அவரது நண்பர் ஸ்ரீநாத் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். சம்பவம் குறித்து, சூரியா அளித்த புகாரில் கவுண்டம்பாளையம் போலீசார் சதீஷ், ஸ்ரீநாத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். வாலிபர் மர்ம மரணம்
சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நவீன் பிரகதீஸ்வரன், 25. இவர் கோவையில் ராமநாதபுரம், 80 அடி சாலை பகுதியில் அறையெடுத்து தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 26ம் தேதி, நவீனின் நண்பரான பெரியசாமி என்பவர் நவீனை பார்க்க அவரது அறைக்கு சென்றார். அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், அருகில் வசிப்பவர்களின் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, நவீன் அயர்ன் பாக்ஸ் ஒயரை பயன்படுத்தி துாக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
12-Feb-2025