உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

புகையிலைப் பொருட்கள் விற்பனை

கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள கடைகளில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள, ஒரு கடையில் சோதனை செய்தனர். அதில், காகித கவரில் புகையிலைப் பொருட்கள் மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கரும்புகடையை சேர்ந்த அப்பாஸ், 38 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 4.5 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய அப்பாஸ் ஹைதர் என்பவரை தேடி வருகின்றனர்.

லாட்டரி விற்ற இருவருக்கு சிறை

கோவை சிறுவாணி ரோடு, தொண்டாமுத்துார் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக, வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காகிதத்தில், லாட்டரி டிக்கெட்கள் எண்களை எழுதி விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், சுண்டப்பாளையம், கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், 43, அருண்குமார், 32 என தெரிந்தது. இதையடுத்து, இருவரையும்போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ