மேலும் செய்திகள்
காப்பர் ஒயர் திருடிய மர்ம நபர்களுக்கு வலை
27-Jan-2025
கோவையை சேர்ந்த, 36 வயது பெண். அவரது மகளுக்கும், செல்வபுரம் சண்முகராஜபுரத்தை சேர்ந்த வினோத்குமார், 22 உடன் பழகி வந்தார். வினோத்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால், அவரை விட்டு இளம்பெண் பிரிந்தார். ஆத்திரமடைந்த வினோத்குமார், நேற்று முன்தினம் பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். மேலும், அங்கிருந்த வாகனத்தை சேதப்படுத்தியதுடன் கத்தியை காட்டி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த பெண்ணையும் அவர் தாக்கியுள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து வினோத்குமாரை சிறையில் அடைத்தனர். பொது இடங்களில் புகைபிடித்தவர்கள் மீது வழக்கு
பொது இடங்களில் புகைபிடிப்பது குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை சாய்பாபா காலனி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சவுரிபாளையத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், 30 என்பவர் புகைபிடித்துக் கொண்டிருந்தார். மேலும், பொது இடத்தில் எச்சில் துப்பியதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிந்தனர். இதேபோல், பீளமேடு போலீசார் புலியகுளம் தர்மராஜ், 49 என்பவர் மீது வழக்கு பதிந்தனர். வயர் திருட்டு; மர்மநபர்களுக்கு வலை
கோவைபுதுாரை சேர்ந்தவர் புருசோத்தமன், 52. இன்ஜினியர். கோவைபுதுார் பகுதியில் வீடு கட்டி வருகிறார். வீடு கட்டும் பணிக்காக தாமிர வயர்கள், கம்பிகளை வைத்திருந்தார். கடந்த, 7ம் தேதி கட்டுமான பணியாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் அந்த தாமிர கம்பிகள், வயர்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து புருசோத்தமன் அளித்த புகாரின் பேரில், குனியமுத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
27-Jan-2025