மக்களுடன் முதல்வர் முகாம்
பெ.நா.பாளையம்;சின்னதடாகத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, சின்னதடாகம் ஊராட்சி தலைவர் சவுந்திர வடிவு தலைமை வகித்தார். முகாமில், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் பங்கேற்று, பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில், மின்சாரம், வருவாய், வேளாண், வனம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 500 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன.