உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காருண்யா பல்கலையில் இணை புதுமை மையம் 

காருண்யா பல்கலையில் இணை புதுமை மையம் 

கோவை: கருண்யா பல்கலை, ஐ.ஐ.டி.,டில்லியின் தொழில்நுட்ப புதுமை மையம் உடன் இணைந்து, இணை புதுமை மையத்தை நிறுவியுள்ளது.இது முன்னணி ஆராய்ச்சி, தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் சந்தைக்கு முற்றிலும் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதை, நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐ.ஐ.டி., டில்லி ஐந்து ஆண்டில் ரூ.1.25 கோடி நிதியுதவியை வழங்குகிறது. இதற்காக, தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 10 உயர்கல்வி நிறுவனங்களில் காருண்யாவும் ஒன்று. விழாவில், ஐ.ஐ.டி.,டில்லியின் தொழில்நுட்ப புதுமை மைய தலைவர் அஷுதோஷ் சர்மா மற்றும் டாக்டர் ஆகாஷ், மையத்தை திறந்து வைத்தனர்.இந்த இணை புதுமை மையம், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க, தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கிடையே, வலுவான பாலமாக செயல்படும் என அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ