மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய நிகழ்வுகள்
23-Aug-2024
கோவை:கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், பல்வேறு தொழில்துறையினர் பங்கேற்கும், ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இதில், அனைத்து பிரிவினரின் முக்கிய பிரச்னையாக முன்வைக்கப்படும் ஜி.எஸ்.டி., சிக்கல்களுக்கு, நல்ல தீர்வு கிடைக்கும் என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க, மத்திய நிதி அமைச்சர் கோவை வந்துள்ளார். இன்று மாலை, 6:30 மணியளவில், தொழில்துறை பிரதிநிதிகளுடன் சந்திப்பு நிகழ்வு, கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ளது. கோவை ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் தினேஷ் புருஷோத்தமராவ் பங்கர்கா, நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, ஜி.எஸ்.டி., வருமான வரித்துறை, எம்.எஸ்.எம்.இ., லெதர் ஏற்றுமதி துறை, வங்கி மற்றும் இன்சூரன்ஸ், ஜவுளித்துறை அதிகாரிகள் பங்கேற்று, தொழில்துறையினரின் பிரச்னைகளை, நேரடியாக ஆலோசிக்கவுள்ளனர். கோவை மட்டுமின்றி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழில்துறையினரும் இக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
23-Aug-2024