உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

கோவை;கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, அரசு அறிவித்தபடி மே 10ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் கணபதி, மணியகாரன்பாளையத்தில் உள்ள சி.எம்.எஸ். பள்ளி, நிர்மல மாதா பள்ளி, பொள்ளாச்சி செண்பகம் மெட்ரிக் பள்ளி ஆகிய மூன்று மதிப்பீட்டு மையங்களில், நடைபெற்று வந்த, பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி, இரு நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது, உள்ளிட்ட இதர பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்த பின், அரசு திட்டமிட்டபடி மே 10ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ