உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை : பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து, கோவை மாவட்ட காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காங்., கட்சி மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை மாநகர் மாவட்ட காங்., சார்பில், கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருவபொம்மையை எரிக்க முயன்றனர்; போலீசார் பறிமுதல் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சிவகுமார், இளைஞர் காங்., மாநில பொதுச் செயலாளர் சூரிய பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ