அப்பநாயக்கன்பட்டியில் காங்.,ஆய்வு கூட்டம்
சூலுார்; அப்பநாயக்கன்பட்டியில் காங்., கட்சி ஆய்வு கூட்டம் நடந்தது.சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பநாயக்கன்பட்டியில் காங்., கட்சி ஆய்வு கூட்டம் நடந்தது. கோவை வடக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கிராம கமிட்டி நிர்வாகிகள் பலர் தங்கள் கருத்துக்களை மாநில தலைவரிடம் கூறினர். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''அனைவருக்கும் அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம். கிராமங்களில் இருந்துதான் வளர்ச்சி உண்டாக வேண்டும் என, மகாத்மா காந்தி அறிவுறுத்தினார். கிராமங்களில் உள்ளவர்களும் அதிகாரத்துக்கு வர வேண்டும். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கிராம கமிட்டி ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, தொண்டர்கள், நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பா.ஜ., அரசு இந்தியை திணிக்கிறது. காங்., ஆட்சி இருக்கும் வரை இரு மொழி கொள்கைதான் இருந்தது. இரு மொழி கற்று உயர்ந்தவர்கள் பலர் உள்ளனர்,'' என்றார்.மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தெண்டர்கள் பலர் பங்கேற்றனர்.