உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.49.75 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.49.75 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

நெகமம், ;நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 49.75 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை விற்பனையாகி உள்ளது.நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ - நாம் திட்டத்தின் வாயிலாக, கடந்த வாரத்தில், (50 கிலோ எடை கொண்ட) 876 கொப்பரை மூட்டைகள், 49.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இதில், 10 விவசாயிகள் மற்றும் 4 வியாபாரிகள் பயனடைந்துள்ளனர்.முதல் தர கொப்பரை ஒரு கிலோ, 145 முதல் 147 ரூபாய் வரையிலும், இரண்டாம் தர கொப்பரை 122 முதல் 128 ரூபாய் வரையிலும் விற்பனையானது.விற்பனை கூடத்தில், தற்போது, 4,732 கொப்பரை முட்டைகளை (50 கிலோ வீதம்) 33 விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர். இது மட்டும் இன்றி, விவசாயிகள் சிலர் இங்குள்ள உலர் களத்தில் தற்போது பாக்கு உலர வைக்க துவங்கியுள்ளனர்.மேலும், நெகமம் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், கொப்பரையை உலர வைக்க போதிய வசதி இருப்பதால், பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என, நெகமம் விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ