உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம்; தடுக்க விழிப்புணர்வு மராத்தான்

பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம்; தடுக்க விழிப்புணர்வு மராத்தான்

கோவை:பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மராத்தான் நடந்தது. பெண்கள் திரளானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.கற்பகம் பல்கலை சார்பில், பெண்களுக்கு எதிரான இணைய வழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மராத்தான் போட்டி நேற்று நடந்தது. போட்டியை, சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட் சங்கர சுப்ரமணியம், வீ ஒண்டர் உமன் தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சுபிதா ஜஸ்டின், கற்பகம் பல்கலை டீன் அமுதா உள்ளிட்டோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.இதில், பெண்கள், ஆண்கள் திரளானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். கோவை நேரு ஸ்டேடியம் எதிரே துவங்கிய மராத்தான் ஏ.டி.டி., காலனி, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி, அண்ணா சிலை வழியாக, 5 கி.மீ., சென்று மீண்டும் நேரு ஸ்டேடியத்தை அடைந்தது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ், டீ சர்ட் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !