உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிற மாநிலங்களை ஆராயும் வேளாண் துறை

பிற மாநிலங்களை ஆராயும் வேளாண் துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மானிய கோரிக்கையில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை, வேளாண் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.நடப்பாண்டு, பிப்ரவரி மாதம் வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, புதிய திட்டங்களுக்கு அரசு உத்தரவு வெளியிடுவது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் சட்டசபையில், துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடக்கவுள்ளது.அப்போது, துறை தொடர்பாக புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அமைச்சர் வெளியிடுவர். பழைய திட்டங்களை துாசு தட்டாமல், விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் வகையிலான, புதிய திட்டங்களை செயல்படுத்த, வேளாண் துறை திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, தமிழக வேளாண் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். நெல் உள்ளிட்ட தானியங்கள் தவிர்த்து, நீர் தேவை குறைந்த பணப் பயிர் சாகுபடி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில், அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

jss
மே 01, 2024 13:02

வேளாண் பட்ஜெட்டிலும் ஆட்டையை போட தயாராகி வருகிறது திராவிட மாடல்


ஆரூர் ரங்
மே 01, 2024 09:18

நம்பர் ஒன் முன்னேறிய மாநிலமாக இருந்தால் ஏன் பிறரைப் பார்த்து காப்பியடிக்க வேண்டும்?


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 01, 2024 08:57

கோயம்புத்தூரில் விவசாய தொழில்நுட்பம் பற்றி என்ஜினீயரிங் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள் சதவிகிதம் நிலம் இல்லாதவர்கள் எப்படி விவசாயம் செய்வார்களோ? வெட்டியாக படிக்கும் ஒரு கூட்டம் எதற்கு என்று தெரியவில்லை


Chanduru
மே 01, 2024 08:09

Government should stop all freebees and spend that money for development which will improve infrastructure and lure companies to start more industries and provide employment to many This will slowly eradicate poverty and bring upliftment of impoverished


அப்புசாமி
மே 01, 2024 07:56

எல்லா மாநில வேளாண் துறையும்.ஒண்ணுதான். இங்கே மட்டும்தான் தொட்டதுக்கெல்லாம் காசு, ஊழல், லஞ்சம்னு அதிகமா இருக்கு. இதுக்கு ஆராய்ச்சி எதுக்கு கோவாலு.


jss
மே 01, 2024 13:04

அப்பு சரியாக சொன்னீர்கள்


முக்கிய வீடியோ