உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் ரோபாடிக் அறுவை சிகிச்சை பிரிவு

ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் ரோபாடிக் அறுவை சிகிச்சை பிரிவு

கோவை:கோவை ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் அதிநவீன, 4ம் தலைமுறை டாவின்சி ரோபாடிக் அறுவை சிகிச்சை முறையைக் கொண்ட அதிநவீன ஆபரேஷன் தியேட்டர் துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறுவை சிகிச்சை அரங்கினை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார்.இந்த சிகிச்சையில் அதிக துல்லியம், அறுவை சிகிச்சை தளத்தில் தொற்று போன்ற குறைவான சிக்கல்கள், குறைந்த வலி மற்றும் ரத்த இழப்பு, குறுகிய காலம் மருத்துவமனையில் இருத்தல் மற்றும் விரைவாக குணமடைதல், சிறிய, அரிதாக கவனிக்கத்தக்க வடுக்கள் போன்ற நன்மைகள் உள்ளன.இந்நிகழ்ச்சியில், குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் அறங்காவலர்கள் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ், விஜய் மோகன், அறக்கட்டளை தலைவர் பதி, துணைத் தலைவர் கோபிநாத், மருத்துவமனை இயக்குனர் மாதவி கோபிநாத், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் (ரோபாடிக்) டாக்டர் பிரவீன் ரவிசங்கரன், தலைமை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ