மேலும் செய்திகள்
விஜயகாந்த் பிறந்த நாள் விழா
26-Aug-2024
வால்பாறை;தே.மு,தி.க., சார்பில், விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்தின், 72 பிறந்த நாள் விழா வால்பாறையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தே.மு.தி.க., நகர பொறுப்பாளர் பாலாஜிரவீந்தரன் தலைமை வகித்தார்.வால்பாறை புதுமார்க்கெட் கட்சி அலுவலகத்தில், விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் பொதுக்குழு உறுப்பினர் சாமி, நகர பொருளாளர் சிவா, தர்மராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
26-Aug-2024