உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட அளவிலான கபடி 41ம் பட்டாலியன் சாம்பியன்

மாவட்ட அளவிலான கபடி 41ம் பட்டாலியன் சாம்பியன்

கோவை;கோவை மாநகர போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு கபடி இறுதிப்போட்டியில் சிட்டி போலீஸ் அணியை வீழ்த்தி, 4ம் பட்டாலியன் அணி கோப்பையை வென்றது.கோவை மாநகர போலீஸ் சார்பில், சர்வதேச போதைப்பொருள் துன்புறுத்தல் தினத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தப்பட்டது.இதன் முதல் கட்டப்போட்டிகள், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கபடி மைதானத்திலும், அடுத்தக்கட்ட போட்டிகள், சரவணம்பட்டியில் உள்ள புரோஜோன் மாலிலும் நடத்தப்பட்டன. ஆண்கள் பிரிவில் 64 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்றன.ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில், ஏ.ஆர்., சிட்டி போலீஸ் அணியும், 4ம் பட்டாலியன் அணியும் மோதின. இப்போட்டியில் 4ம் பட்டாலியன் அணி அபாரமாக விளையாடி, 26 - 12 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.மூன்றாம் இடத்தை தினா நினைவு கபடி அணியும், நான்காம் இடத்தை கள்ளிமடை கே.எஸ்.சி., அணியும் பிடித்தன. இதேபோல், பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் பயனீர் கபடி அணி, 27 - 18 என்ற புள்ளிக்கணக்கில், வளர்பிறை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. பரிசுகளை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை