உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை :தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை :தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை;மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்து விட்டதாக கூறி, கோவை மாவட்ட தி.மு.க., சார்பில், டாடாபாத் பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கோவை எம்.பி., ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், புறநகர் மாவட்ட செயலாளர்கள் ரவி, முருகேசன், முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலுார் பழனிசாமி, மகளிரணி துணை செயலாளர்கள் மாலதி, மீனா உட்பட பலர் பங்கேற்றனர்.இப்போராட்டம் காரணமாக, வடகோவை மேம்பாலம் வழியாக வந்த வாகனங்கள் ஸ்தம்பித்ததால் வடகோவை, நுாறடி ரோடு, சிவனாந்தா காலனி ஆகிய பகுதிகளில், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது; போலீசார் ஒழுங்குபடுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை