| ADDED : ஏப் 06, 2024 08:13 PM
கோவை லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், சாய்பாபா காலனி அழகேசன் சாலையில் பிரசாரம் மேற்கொண்டார்.அவருடன் பிரசார வாகனத்தில் காங்., கட்சி கவுன்சிலர் காயத்ரி மற்றும் அவரது தந்தையும் முன்னாள் மேயருமான காலனி வெங்கடாசலம் உள்ளிட்டோர், பிரசார வாகனத்தில் இருந்தனர்.இருவரும் தங்களது சொந்த விஷயங்களை பேசிக்கொண்டே வந்தனர்.இடைமறித்த ராஜ்குமார், ''வந்ததிலே இருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன்... நீங்க இருவரும் தொடர்ந்து, பேசிக்கிட்டே இருக்கீங்க. தேர்தல் சூடு பிடிச்சிருச்சு. அதனால சொந்தக்கதை நிறைய பேசாமல், பிரசாரத்தை தீவிரமாமேற்கொள்ள வேண்டும்,'' என, அட்வைஸ் கூறினார்.