உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகனத்தில் அடிபட்டு நாய் பலி; அப்புறப்படுத்த கோரிக்கை

வாகனத்தில் அடிபட்டு நாய் பலி; அப்புறப்படுத்த கோரிக்கை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், ஸ்டேட் பேங்க் அருகே இறந்து கிடக்கும் நாயை அப்புறப்படுத்த, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டின் இரு புறங்களிலும், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் என ஏராளமாக உள்ளன. இந்த ரோட்டில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.மேலும், ரோட்டின் ஓரத்தில், கடைகளுக்கு சென்று வரும் பயணியர் வாகனங்கள் மற்றும் லோடு வண்டிகள் பார்க்கிங் செய்யப்படுகிறது.இதில், கடந்த மூன்று நாட்களுக்கு முன், ரோட்டில் அடிபட்டு நாய் ஒன்று இறந்தது. இதை அங்கிருந்த சிலர், ஸ்டேட் பேங்க் அருகே ரோட்டின் ஓரத்தில் போட்டுச்சென்றனர்.இந்த நாய் மூன்று நாட்கள் ஆகியும் அங்கேயே கிடப்பதால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது.எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், இங்கு இறந்து கிடக்கும் நாயை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை