உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராம்நகர் வீதியில் குடிநீர் வீணாகிறது

ராம்நகர் வீதியில் குடிநீர் வீணாகிறது

கோவை:கோவை ராம்நகர் அன்சாரி வீதி திருப்பத்தில், குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.இந்த குழாயில் உடைப்பு ஏற்படுவது, இது முதல் முறையல்ல; அடிக்கடி உடைந்து தண்ணீர் வீணாவது வழக்கமாக உள்ளது. குழாயை அடைத்து சரி செய்பவர்கள், உடைப்பை முழுமையாக ஆராய்ந்து சரி செய்வதில்லை. அதனால் குழாய் உடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.குழாய் உடைப்புக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து, மறுபடியும் உடைப்பு ஏற்படாமல் சரி செய்ய வேண்டும் என, அந்த பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை