உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்டாப்புகளில் பஸ் பே அவசியம் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

ஸ்டாப்புகளில் பஸ் பே அவசியம் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி நகரில், நாளுக்கு நாள் வாகனங்களின் இயக்கம் அதிகரித்து வருகின்றன. 'பார்க்கிங்' வசதி இல்லாமை, ரோட்டோர ஆக்கிரமிப்பு, விதிமீறல் போன்ற காரணங்களால், ஆங்காங்கே வாகன நெரிசல் அதிகரிக்கிறது.இந்நிலையில், நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், பயணியரை ஏற்றி இறங்க முற்படும் பஸ்கள், ரோட்டின் நடுவிலேயே நிறுத்தப்படுகிறது. பஸ்சை பின் தொடரும் வாகனங்கள், நீண்ட நேரம் அணிவகுத்து நிறுத்த வேண்டியுள்ளது. விபத்து அபாயமும் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஸ்டாப் உள்ள பகுதிகளில் 'பஸ் பே' அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி வழித்தடங்களில், ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், 'பார்க்கிங்' வசதியின்றி ஏற்படுத்தப்படும் வணிகக் கடைகள் காரணமாக, சீரான போக்குவரத்து தடைபடுகிறது.அனைத்து வழித்தடங்களிலும் பயணியரின் நலன் கருதி, 'பஸ் பே' அமைக்க வேண்டும். நெரிசலற்ற மற்றும் தடையற்ற வாகன போக்குவரத்துக்கு துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !